நீலகிரி மாவட்டம் 65 சதவீத வனப்பகுதியைக் கொண்ட மாவட்டம் ஆகும். இங்கு நாள்தோறும் வனவிலங்குகள் உணவு மற்றும் தண்ணீர் தேடி குடியிருக்கும் பகுதிக்குள் உலாவருவது பொதுவாக உள்ளது. இந்நிலையில் நீலகிரி மாவட்டம் கூடலூர் பகுதியில் சாலையில் நின்றுகொண்டிருந்த வாகனத்தைச் சேதப்படுத்தியது காட்டு யானை. ஊருக்குள் உலாவரும் காட்டு யானையை அடர்ந்த வனப்பகுதிக்கு விரட்ட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.