நீலகிரி: நகராட்சி ஆணையர் காத்திருப்பு பட்டியலுக்கு மாற்றம்
உதகை நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் புதிதாக தொடங்கிய ஜவுளிக்கடை கட்டடம், பார்க்கிங் டெண்டரை குறைவாக விட்டுபணம் பெற்றது உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்தது. இந்நிலையில் நகராட்சி ஆணையர் ஜஹாங்கீர் பாஷா கடந்த சனிக்கிழமை (நவம்பர் 09) பணியை முடித்துக்கொண்டு சொந்த ஊரான சென்னைக்கு கோத்தகிரி சாலை வழியாக வாடகை காரில் சென்று கொண்டிருந்ததார். அப்போது ரகசிய தகவலின் அடிப்படையில் லஞ்ச ஒழிப்புத்துறை காவல் துணை கண்காணிப்பாளர் ஜெயக்குமார், ஆய்வாளர் பரிமளாதேவி, சப்- இன்ஸ்பெக்டர் ரங்கநாதன் அடங்கிய குழுவினருக்கு தொட்டபெட்டா சந்திப்பு பகுதியில் ஜஹாங்கீர் பாஷா காரை நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது காரில் கணக்கில் வராத ரூ. 11 லட்சத்து 70 ஆயிரம் பணம் இருந்தது தெரிய வந்தது. பணம் பறிமுதல் செய்யப்பட்டு தீவிர விசாரணை நடந்தவந்த நிலையில், ஜஹாங்கீர் பாஷா இன்று (நவம்பர் 12) காத்திருப்பாேர் பட்டியலுக்கு மாற்றி நகராட்களின் மண்டல நிர்வாக இயக்குனரகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.