மின் கம்பத்தில் தீப்பந்தம் கட்டி தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

69பார்த்தது
மின் கம்பத்தில் தீப்பந்தம் கட்டி தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
பந்தலூர் தாலுகா -சேரங்கோடு அருகே சிங்கோனா அரசு தேயிலை தோட்டம் உள்ளது. இங்கு ஏராளமான தொழிலாளர்கள் தங்களது குடும்பத்தினருடன் குடியிருப்புகளில் வசித்து வருகின்றனர். அப்பகுதியில் காட்டு யானைகள் புகுந்து வீடு களை சேதப்படுத்தி வருகிறது. இரவு நேரங்களில் வீடுகளை முற்றுகையிட்டும் வருகின்றன. அங்கு தெரு விளக்குகள் எரி யாமல் இரவில் இருளில் மூழ்கி கிடக்கிறது. இதுதொடர்பாக சேரங்கோடு ஊராட்சி நிர்வாகத் திடம் புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்காததால் பொதுமக்கள் மின் கம்பத்தில் தீப்பந்தம் கட்டி தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி