ஊட்டி ஸ்டோன் ஹவுஸ் பகுதியை சேர்ந்தவர் கிரிஜா தேவி, வீட்டு பீரோவில் வைத்த, 5 பவுன் நகை காணாமல் போனதை கண்டு அதிர்ச்சியடைந்தார். ஊட்டி பி-1 போலீசில் புகார் அளித்தார். பி-1 இன்ஸ்பெக்டர் வழக்கு பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டார். அதில், அதே பகுதியை சேர்ந்த சுசீலா, 35, என்பவர் கிரிஜா தேவி வீட்டுக்கு வந்து சென்றது தெரியவந்தது.
போலீசார் அவரிடம் விசாரணை நடத்திய 'கடனை அடைக்க முடியாமல் திருடினேன், ' என ஒப்புக் கொண்டார். கைது செய்த போலீசார், கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.