காட்டு யானை காரின் கண்ணாடியை உடைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது

71பார்த்தது
காட்டு யானை சாலையை வழிமறித்ததால் ஒரு மணி நேரத்திற்கு மேலாக பொதுமக்கள் அச்சத்துடன் சாலையிலேயே காத்திருந்தனர் காட்டு யானை சாலையை வழிமறித்து கார் கண்ணாடிய உடைத்த காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

கோத்தகிரியில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லக்கூடிய மலை பாதை அடர்ந்த வனப்பகுதி என்பதால் அவ்வப்போது காட்டு யானைகள் மலைப்பாதையில் உலா வருவது வாகன ஓட்டுகள் இடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது இந்த நிலையில் மேட்டுப்பாளையத்தில் இருந்து கோத்தகிரி செல்லக்கூடிய சாலையிலுள்ள இரண்டாவது வளைவில் நேற்று இரவு காட்டு யானை ஒன்று திடீரென உலா வந்தது இதனால் அச்சாலை வழியாக பயணித்த கார் ஓட்டுநர் வாகனத்தின் இப்போது காட்டு யானை திடீரென காரின் கண்ணாடியை உடைத்தது இதனால் காரில் வந்தவர்கள் கூச்சலிட்டனர் பின்பு சாலை வழியாக பயணித்த மற்ற வாகன ஓட்டிகள் கூச்சலிட்டதால் யானை சாலையில் மெதுவாக நடந்தது இதனால் ஒரு மணி நேரத்திற்கு மேலாக மலைப்பாதையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது ஒற்றைக் காட்டு யானை மலைப்பாதையில் நடமாடுவதால் வாகன ஓட்டிகள் கவனமுடன் செல்ல வனத்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர் மலைப்பாதையில் காட்டு யானை காரின் கண்ணாடியை உடைத்த இந்த காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி