நீலகிரி: நெடுஞ்சாலையில் முகமிட்டுள்ள 3 காட்டு யானைகள்..வீடியோ

65பார்த்தது
நீலகிரி மாவட்டம் குன்னூர் மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலையில் முகமிட்டுள்ள மூன்று காட்டு யானைகள் மரத்தின் மீது ஏறி பழா பழம் பறிக்கும் காட்சி வாகனத்தில் செல்வோர் பாதுகாப்பாக செல்ல குன்னூர் வனத்துறையினர் அறிவுறுத்தல். 

சமவெளிப் பகுதிகளில் அதிக வெயிலின் தாக்கம் காணப்படுவதால் மேட்டுப்பாளையம் சத்தியமங்கலம் வனப்பகுதிகளில் உணவு பற்றாக்குறை காணப்படுவதால் காட்டு யானைகள் உணவு மற்றும் தண்ணீர் தேடி மேட்டுப்பாளையம் மற்றும் கோத்தகிரி மலைப்பாதைகளில் வருவது வழக்கம். இந்நிலையில் குன்னூர் மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலை பரலியார் பகுதியில் கடந்த ஒரு வாரகாலமாக மூன்று காட்டு யானைகள் முகாமிட்டு சுற்றி வருகின்றன. 

குன்னூர் மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் காட்டு யானைகளை புகைப்படம் எடுக்கவோ அச்சுறுத்தவோ கூடாது எனவும் வாகனத்தில் செல்வோர் பாதுகாப்பாக செல்ல வேண்டும் என்று குன்னூர் வனத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
Job Suitcase

Jobs near you