குன்னூர் தேயிலை தோட்டம் நடுவில் உள்ள மரத்தின் மீது ஏறிய கரடியின் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரல்.
நீலகிரி மாவட்டம் குன்னூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக உணவு மற்றும் தண்ணீர் தேடி சிறுத்தை கரடி காட்டுமாடு உள்ளிட்ட வன விலங்குகள் குடியிருப்பு , தேயிலை தோட்டங்களிலும் உலா வருகின்றன.
இந்நிலையில் குன்னூர் பகுதியில் தேயிலை தோட்டத்தில் உள்ள மரத்தின் மீது உணவு தேடி கரடி ஒன்று ஏறி வெகு நேரமாக அமர்ந்திருந்தது. இதனை அவ்வழியாக சென்றவர்கள் தங்களது செல்போனில் வீடியோ பதிவு செய்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளனர் இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.