நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே உள்ள காட்டேரி பூங்காவில் கோடை விழாவின் இறுதி விழாவான மலை பயிர்கள் கண்காட்சி இன்றுடன் நிறைவு செய்யப்பட்டு போட்டியாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
இறுதி விழாவாக நீலகிரி மாவட்டம் குன்னூர் மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள காட்டேரி பூங்காவில் முதல்முறையாக மலை பயிர்கள் கண்காட்சி கடந்த வெள்ளிக்கிழமை அன்று துவங்கியது மூன்று நாட்கள் நடைபெற்ற இந்த கண்காட்சி இன்றுடன் நிறைவு பெறுகிறது.
இந்த கண்காட்சியில் பனங்காய் மற்றும் இளநீர் கொண்டு கிராமத்து வீடு மற்றும் பசுங்கன்று வீட்டில் வளர்க்கப்படும் கோழிகள் ஏர் கலப்பை மற்றும் மாட்டு வண்டிபோன்ற பல வகையானஉருவங்கள் உருவாக்கி சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் காட்சிப்படுத்தப்பட்டது.
இந்த நிகழ்ச்சியின் இறுதி விழா இன்று நிறைவு செய்யப்பட்டது இதில் குன்னூர் சார் ஆட்சியர் சங்கீதா வட்டாட்சியர் ஜவகர் மற்றும் தோட்டக்கலை இணை இயக்குனர் சிபிலாமேரி மற்றும் தோட்டக்கலைத் துறையினர் கலந்து கொண்டு போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கி கோடை விழாவினை நிறைவு செய்தனர்.