யானைகள் அட்டகாசத்தால் பொதுமக்கள் அச்சம்

84பார்த்தது
யானைகள் அட்டகாசத்தால் பொதுமக்கள் அச்சம்
பந்தலூர் சுற்று வட்டாரப்பகுதியில் காட்டு யானைகளின் நடமாட்டம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. குடியிருப்புகளை சேதம் செய்வது, விவசாய பயிர்களை சேதம் செய்வது, யானை மனித மோதல்களினால் உயிரிழப்பு தொடர்ந்து நடைப்பெற்று வருகிறது. நேற்று அய்யன்கொல்லி முருக்கம்பாடி பகுதியில் வசித்துவரும் கூலித்தொழிலாளி ராசலிங்கம் என்பவரது வீட்டை காட்டுயானைகள் கூட்டம் உடைத்து சேதம் செய்ததோடு, வீட்டின் முன்பாக இருந்த பிளாஸ்டிக் தண்ணீர் தொட்டியையும் உடைத்து சேதப்படுத்தியுள்ளது. குடியிருப்புக்குள் புகுந்து பொதுமக்களை அச்சுறுத்தி வரும் காட்டுயானைகளை கும்கி யானைகளை கொண்டு அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்டுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண் டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி