5-வது அக்னிவீரர் படையின் வெளியேறும் அணிவகுப்பு

82பார்த்தது
நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே உள்ள வெல்லிங்டன் மெட்ராஸ் ரெஜிமென்டல் மையத்தில் நடைபெற்ற 5-வது அக்னிவீரர் படையின் வெளியேறும் அணிவகுப்பு இன்று காலை நடைபெற்றது.

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே உள்ள வெலிங்டன் ராணுவ முகாமில் தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானா ஆகிய மாநிலங்களை சேர்ந்த(551) வீரர்களுக்கு அக்னிவீர் பயிற்சி அளிக்கப்பட்டு எல்லைப் பகுதிகளுக்கு பாதுகாப்பு பணிக்காக அனுப்ப உள்ளனர்.

இந்நிலையில் 551அக்னி வீரர்களின் கடுமையான பயிற்சி கடந்த(31) வாரம் நடைபெற்று இன்று நிறைவடைந்தது அக்னி வீரர்கள் நாட்டின் எல்லைப் பகுதிகளுக்கு அனுப்பும் நிகழ்ச்சி இன்று நடந்தது. இதில் மேஜர் ஜெனரல் மேத்யூ, பயிற்சி எம், அஆர், சி. கமாண்டர் கிருஷ் நேந்து தாஸ் உள்ளிட்ட ராணுவ உயர் அதிகாரிகள் கலந்துகொண்டு வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டனர். இதனைத் தொடர்ந்து அனைத்து வீரர்களும் தேசியக்கொடி, பகவத் கீதை, குரான், பைபிள் ஆகியவற்றின் மீது கை வைத்து ஒவ்வொரு வீரரும் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். இந்த வீரர்களுக்கு நாட்டின் எல்லையில் நான்கு ஆண்டு காலம் மட்டுமே பணி செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளது. நிகழ்ச்சியில் ராணுவ வீரர்களின் குடும்பத்தினர் மற்றும் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி