நீலகிரிகுன்னூரில் தந்தி மாரியம்மன் கோவில் திருத்தேரை வடம் பிடித்து வழிபாடு செய்த பக்தர்கள் உப்பு, தூவி நேர்த்திக்கடன் செலுத்தினர்.
குன்னூரில் பிரசித்தி பெற்ற தந்தி மாரியம்மன் கோவில் தேர் திருவிழா கடந்த நான்காம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. முக்கிய விழாவான தேர்வடம் பிடித்தல் நிகழ்ச்சி இன்று நடந்தது. இதனை முன்னிட்டு துருவம்மன் கோவிலில் இருந்து ஆடல் பாடல்களுடன், அம்மன் அலங்கார சீர்வரிசை பொருட்களுடன் ஊர்வலமாக, தந்தி மாரியம்மன் கோவிலை வந்தடைந்தனர்.
இதைத் தொடர்ந்து சிறப்பு பூஜை நடத்தப்பட்ட பின்னர், தேர்முட்டி பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அலங்கரிக்கப்பட்ட தேரில் பூசைகள் நடத்தப்பட்டு தேர் வடம் பிடிக்கப்பட்டது. விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று, சாமி தரிசனம் செய்தனர்.