பள்ளிக்கு செல்லும் குழந்தைகளுக்கு இனிப்பு வழங்கினர்

74பார்த்தது
கோடை விடுமுறை முடிந்து பள்ளிக்கு வந்த குழந்தைகளுக்கு கோத்தகிரி போக்குவரத்து காவல்துறை சார்பில் இனிப்புகள் வழங்கப்பட்டது


கடந்த ஒரு மாத காலமாக அணைத்து பள்ளிகளுக்கும் கோடை விடுமுறை அளிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து இன்று ஜூன் 2 ம் தேதி கோடை விடுமுறை முடிந்து அணைத்து பள்ளிகளும் திறக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்து இருந்த நிலையில் இன்று அணைத்து பள்ளிகளும் திறக்கப்பட்டது. இதில் இன்று கோத்தகிரி போக்குவரத்து காவல்துறை சார்பில் பள்ளிக்கு வந்த குழந்தைகளுக்கு கோத்தகிரி போக்குவரத்து காவல்துறை ஆய்வாளர் தலைமையில் போக்குவரத்து காவலர்கள் பள்ளி குழந்தைகளுக்கு இனிப்புகளை வழங்கி வாழ்த்துக்களை தெரிவித்து வரவேற்றனர் இந்த நிகழ்வு அங்கு இருந்த குழந்தைகள் மற்றும் பெற்றோர்களிடயே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி