புனித அந்தோணியார் குருசடி ஆலய திருவிழா

52பார்த்தது
புனித அந்தோணியார் குருசடி ஆலய திருவிழா
குன்னூர் அருகே பேரக்ஸ் சின்ன வண்டிசோலை குடியிருப்பு பகுதியில் புனித அந்தோணியார் குருசடி ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தின் 120-வது ஆண்டு திருவிழா கடந்த 21-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. ஒவ்வெரு நாளும் மாலையில் நவநாள் திருப்பலி நடைபெற்றது. இந்த ஆண்டு 120 ஆண்டை சிறப்பிக்கும் வகையில், 2 சப்பரங்களில் ஒன்றில் புனித அந்தோ ணியாரும் மற்றொன்றில் மாதா மற்றும் செபஸ்தியார் சொரூபம் வைத்து செண்டை மேளங்கள் முழங்க பவனி நடந்தது. இதனை தொடர்ந்து பேரக்ஸ் புனித சூசையப்பர் ஆலய பங்கு தந்தை ஆரோக்கியசாமி தலைமையில் திருப்பலி நடைபெற்றது. புனித அந்தோணியார் தேர் பவனி முக்கிய வீதிகள் வழியாக சென்றது. இதில் சுற்றியுள்ள 5 கிராமங்களை சேர்ந்தவர்கள் கலந்துகொண் டனர். இதற்கான ஏற்பாடுகளை சின்ன வண்டிசோலை புனித அந்தோணியார் பஜனை சங்கம், மலையப்பன் காட்டேஜ் ஊர் பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் செய்திருந்தனர்,
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி