ஊட்டி நகராட்சியை மாநகராட்சியாக தரம் உயர்த்த கோரிக்கை

260பார்த்தது
ஊட்டி நகராட்சியை மாநகராட்சியாக தரம் உயர்த்த கோரிக்கை
சுற்றுலா நகரமான ஊட்டியில் தாவரவி யல் பூங்கா, ரோஜா பூங்கா, படகு இல்லம், தொட்ட பெட்டா, மரவியல் பூங்கா, தேயிலை பூங்கா உள்ளிட்ட பல்வேறு சுற்றுலா தளங்கள் உள்ளன. இவைகளை காண வெளிநாடுகள், வெளி மாநி லங்கள் மற்றும் வெளியூர்களில் இருந்து நாள் தோறும் பல ஆயிரம் சுற்றுலா பயணிகள் வருகின்றனர். ஆனால், ஊட்டி நகரில் போதுமான அடிப்படை வசதிகள் உள்ள? என்பது கேள்விக்குறியாக உள்ளது. மேலும், மேம்பாட்டு பணிகள் எதிர்பார்த்த அளவிற்கு மேற் கொள்ளப்படுவதில்லை. நகராட்சிக்கு போதுமான நிதி கிடைக்காத நிலையில், மேம்பாட்டு பணிகள், வளர்ச்சி பணிகள் மற்றும் தேவையான கட்டமைப்பு வசதிகளை நகராட்சி நிர்வாகம் மேற்கொள்ளப்பட முடியாத நிலை உள்ளது. ஊட்டி நகராட்சியை தரம் உயர்த்தி மாநகராட்சியாக அறிவித்தால், பல்வேறு திட்டங்களை நிறைவேற்ற முடியும். ஒன்றிய அரசின் பல்வேறு திட்டங் கள் கிடைக்கும். இதன் மூலம், ஊட்டி நகரில் பல்வேறு கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த முடியும். தற்போது. ஊட்டி நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் சுமார் ஒரு லட்சம் மக்கள் வசித்து வருகின்றனர். எனவே, ஊட்டி நகராட்சியை மாநகராட்சியாக தரம் உயர்த்த தமிழக அரசு முன் வேண்டும் என பொது மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி