நகராட்சி வணிக வளாகத்தில் மழைநீர் புகுந்து சேதம்

81பார்த்தது
நகராட்சி வணிக வளாகத்தில் மழைநீர் புகுந்து சேதம்
பந்தலூர் பஜார் பழைய பஸ் ஸ்டாண்ட் பகுதியில் நெல்லியாளம் நகராட்சி வணிக வளாகம் உள்ளது. இந்த கட்டிடத்தில் இந்தியன் வங்கி, அஞ்சலகம், கடைகள், டிரைவிங் ஸ்கூல் உள்ளிட்டவை செயல்பட்டு வருகிறது. கனமழை பெய்தால் கூரையில் இருந்து வரும் மழைநீர் கட்டிடத்தின் மேல்மாடியில் உள்ள அஞ்சலகத்திற்கு மழைநீர் செல்கிறது.

இதனால், அஞ்சலகத்தில் பணி புரியும் ஊழியர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் மிகவும் பாதிக்கப்படுகின்றனர். தொடர் மழை நீடித்தால் மழைநீர் தேங்கி கட்டிடம் பழுதடைந்து சேதம் ஏற்படும் நிலை உள்ளது. எனவே, நெல்லியாளம் நகராட்சி நிர்வாகம் வணிக வளாகத்திற்குள் மழைநீர் புகாதவாறு பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் என வியாரிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி