கோத்தகிரியில் மழை விவசாயிகள் மகிழ்ச்சி

82பார்த்தது
நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் இன்று (ஜூன் 6) அதிகாலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது இந்நிலையில் காலை முதலே கோத்தகிரி அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மிதமான முதல் கன மழை பெய்து வருகிறது இதனால் குளிர்ந்த கால நிலையும் ஏற்பட்டுள்ளது.

கோத்தகிரி சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில தினங்களாக அவ்வப்போது மழை பெய்து வருவதால் காய்கறிகள், தேயிலை மகசூல் அதிகமாக வர வாய்ப்புள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். வானம் மேகமூட்டம் காணப்படுவதால் வாகன ஓட்டிகள் அதிக அளவில் பாதிப்படைந்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி