கோத்தகிரி: உலா வரும் காட்டெருமையால் பொதுமக்கள் அச்சம்

50பார்த்தது
கோத்தகிரி நகர் பகுதியில் உலா வரும் காட்டெருமையால் பொதுமக்கள் அச்சம். வனத்துறையினர் உடனடியாக காட்டெருமையை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

நீலகிரி மாவட்டம் 55 சதவீதம் வனப்பகுதியை கொண்டுள்ள மாவட்டம். இங்கு யானை, புலி, கரடி, சிறுத்தை, காட்டெருமை போன்ற வனவிலங்குகள் அதிக அளவில் வசிக்கக்கூடிய மாவட்டமாகும். இந்நிலையில் வனவிலங்குகள் உணவு மற்றும் தண்ணீர் தேடி சமீப காலமாக குடியிருப்பு பகுதிகளுக்கு வரத் தொடங்கியுள்ளன. 

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி ராம்சந்திர நகர் பகுதியில் மக்கள் அதிகமாக கூடிய பகுதியில் இன்று காலை காட்டெருமை நகர் பகுதியில் உலா வந்துள்ளது. அப்போது அப்பகுதியில் உள்ள மக்கள் காட்டெருமையைக் கண்டு பெரும் அச்சம் அடைந்தனர். அப்பகுதியில் தொடர்ந்து காட்டெருமை உலா வருவது வாடிக்கையாக உள்ளது. எனவே வனத்துறையினர் காட்டெருமையை வனப்பகுதியில் விரட்ட வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி