பந்தலுார் அரசு மருத்து வமனை வளாகத்தில், காச நோயால் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளுக்கு ஊட்டச் சத்து பெட்டகம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. டாக்டர் முகமது யாசிர் தலைமை வகித்து, 'காச நோயாளிகளுக்கு அரசு மருத்துவமனையில் வழங்கப்படும் சிகிச்சை முறைகள், அவர்களை அரவணைத்து செல்ல வேண்டியதன் அவசியம் மற்றும் உட்கொள்ள வேண்டிய ஊட்டச்சத்து, ' குறித்து விளக்கம் அளித்தார். சிகிச்சை பெற்று வரும், 25 காசநோயாளிகளுக்கு பச்சை பயிர், கம்பு, பதாம், பொட்டுக்கடலை, வேர்க்கடலை, உலர் திராட்சை, பேரிச்சம்ப ழம், கொண்டை கடலை உள்ளிட்ட ஊட்டச்சத்து பொருட்கள் அடங்கிய பெட்டகம் வழங்கப்பட் டது. காசநோய் தடுப்பு பிரிவு முதுநிலை சிகிச்சை மேற்பார்வையாளர் விஜயகுமார், பணியாளர் மோனிஷா உட்பட பலர் பங்கேற்றனர்.