லாரி கவிழ்ந்து விபத்து காவல்துறை விசாரணை

74பார்த்தது
நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே கேரட் ஏற்றி வந்த லாரி ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து குன்னூர் மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

நீலகிரி மாவட்டம் உதகை அருகே உள்ள முள்ளிக்கூர் பகுதியில் இருந்து கேரட் ஏற்றி வந்த லாரி குன்னூர் மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலை டபுள் ரோடு அருகே சென்று கொண்டிருந்த பொழுது ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்தது வாகனத்தை மேட்டுப்பாளையத்தை சேர்ந்த சுபாஷ் என்பவர் ஓட்டி வந்துள்ளார் மேலும் வாகனத்தில் வந்த குருமூர்த்தி என்பவருக்கு இடது கை விரலில் லேசான காயம் ஏற்பட்டதுதகவல் அறிந்த நெடுஞ்சாலை ரோந்து காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து காயமடைந்த குரு மூர்த்தியை ஆம்புலன்ஸ் மூலம் குன்னூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் ஓட்டுனர் எவ்வித காயங்களும் இன்றி தப்பினார் விபத்து குறித்து குன்னூர் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி