நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே நேற்றைய தினம் அதிகாலை சாலையில் உலா வந்த கரடி அதன் சிசிடிவி காட்சிகள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
கரடியை கூண்டு வைத்து பிடித்து அடர்ந்த வனப் பகுதியை விட வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை.
நீலகிரி மாவட்டத்தை பொருத்த அளவில் வனப்பகுதிகள் மற்றும் தேயிலை தோட்டங்கள் நிறைந்த பகுதியாகும் தற்போது வனவிலங்குகள் குறிப்பாக கரடி சிறுத்தை கருஞ்சிறுத்தை புலி மற்றும் காட்டெருமைகள் நடமாட்டம் நாள்தோறும் பகல் மற்றும் இரவு வேலைகளில் குடியிருப்பு பகுதிகள் சாலைகள் நகரப் பகுதிகளில் காணப்படுகிறது இந்நிலையில் காட்டேரியிலிருந்து குந்தா செல்லும் சாலையில் கரும்பாலம் டபுள் போஸ்ட் சாலையில் நேற்றைய தினம் அதிகாலை கரடி ஒன்று உலா வந்தது அதன் சிசிடிவி காட்சிகள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது உடனடியாக வனத்துறையினர் கூண்டு வைத்து பிடித்து அடர்ந்த வனப் பகுதியில் விட வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்