சாலையில் சுற்றித்திரியும் மாடுகளுக்கு அபராதம்.

675பார்த்தது
சாலையில் சுற்றித்திரியும் மாடுகளுக்கு அபராதம்.
பந்தலூர் அருகே சேரங்கோடு ஊராட்சியின் தலைவர், துணை தலைவர் மற்றும் செயலாளர் ஆகியோர் கூட்டாக விடுத்துள்ள அறிக்கையில் கூறியி ருப்பதாவது: சேரங்கோடு ஊராட்சி பகுதியில் மாடுகள் வளர்ப்போர் கவனத் திற்கு, தாங்கள் வளர்க்கும் மாடுகள் சாலையில் சுற்றித்திரிவதால் பொதுமக் களுக்கும், வியாபாரிகளுக்கும், போக்குவரத்திற்கும் மிகவும் ஆபத்தாக இருந்து வருகிறது. மாடுகளை சாலையில் விடவேண்டாம் என பலமுறை அறிவுறுத்தியும், கடிதம் மூலம் அறிவுறுத்தியும் அதே நிலை தொடர்கிறது. எனவே பொதுமக்களின் நலன்கருதி இன்று (6ம் தேதி)முதல் சாலைகளில் சுற்றித்திரியும் மாடுகள் பிடிக்கப்படும். அவ்வாறு பிடிக்கப்படும் மாடுகளை ஊராட்சி மூலம் மூன்று நாட்களுக்கு பராமரிக்கப்பட்டு அதன்பின் பொது ஏலத்திற்கு விடப்படும். அவ்வாறு பராமரிக்கப்படும் மாடுகளுக்கு நாள் ஒன்றுக்கு ரூ. 2000 பராமரிப்பு செலவாக கால்நடைகளின் உரிமையாளர்களிடமிருந்து வசூலிக்கப்படும். மேலும் பிடிப்பட்ட மாடுகள் மீண்டும் தெருவில் விடமாட்டோம் என உறுதியளித்தப்பின் மாடு உரிமையாளரிடம் விடப்படும். இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி