நீலகிரி மாவட்டம் குன்னூர் மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலையில் கட்டுப்பாட்டை இழந்த வேன் தடுப்புச்சுவர் மீது மோதி விபத்துக்குள்ளான நிலையில் ஒருவர் பலி.
21 நபர்களில் குன்னூர் அரசு மருத்துவமனையில் 8 பேரும், மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் 13 பேர் அனுமதி.
நீலகிரி மாவட்டத்திற்கு
திருச்சி மாவட்டம் குளித்தலை பகுதியில் இருந்து உதகையில் உள்ள உறவினரின் இறப்பு சம்பந்தமாக இன்று காலை தனியார் வேனில் ஓட்டுநர் உட்பட 22 நபர்கள் வந்துள்ளனர். ஈமசடங்கு முடித்துவிட்டு மீண்டும் குளித்தலைக்கு சென்றுகொண்டிருக்கும் போது எதிர்பாராத விதமாக குன்னூர் மலைப்பாதையில் அமைந்துள்ள பர்லியார் குரும்பாடி அருகே ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த வேன் தடுப்பு சுவரில் மோதி விபத்துக்குள்ளானது.
இதனை அறிந்த குன்னூர் காவல்துறையினர் மற்றும் ஆம்புலன்ஸ் வாகனங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். இருப்பினும் 8 நபர்களை குன்னூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மீதமுள்ள 14 நபர்கள் மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில் பலத்த காயம் ஏற்பட்ட சாமிநாதன் (44) குன்னூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். மீதமுள்ள நபர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்து குறித்து குன்னூர் நகர போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.