குன்னூர் அருகே பாறையில் இருந்து சறுக்கி விழுந்த பெண் யானை துடிதுடித்து பலியான வீடியோ இணையத்தில் வெளியாகி கண்ணீரை வரவழைத்துள்ளது. உணவு தேடி வந்த 15 வயது மதிக்கத்தக்க பெண் யானை, மேட்டுப்பாளையம் நெடுஞ்சாலையின் 6-வது கொண்டை ஊசி வளைவு அருகேயுள்ள மலையில் இருந்து உருண்டு விழுந்தது. இதில் படுகாயமடைந்த யானை பரிதாபமாக உயிரிழந்தது. இதுகுறித்து வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.