நெடுஞ்சாலையில் உலாவரும் காட்டு யானைகளால் வாகன ஓட்டிகள்அச்சம்

73பார்த்தது
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலையில் உலாவரும் காட்டு யானைகளால் வாகன ஓட்டிகள் அச்சம்.

சமவெளிப் பகுதிகளில் அதிக வெயிலின் தாக்கம் காணப்படுவதால் வனவிலங்குகள் உணவு மற்றும் தண்ணீர் தேடி மலை மாவட்டத்தை நோக்கி படையெடுத்து வருகிறது இந்நிலையில் நீலகிரி மாவட்டத்தில் பலாப்பழ சீசன் துவங்கியுள்ளதால் காட்டு யானைகள் உணவு மற்றும் தண்ணீர் தேடி வருவது வழக்கம் இந்நிலையில் கோத்தகிரி மேட்டுப்பாளையம் சாலையில் முள்ளூர் சோதனை சாவடி அருகே குட்டியுடன் யானை உலா வருவதால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்துள்ளனர் மேலும் தொடர் விடுமுறை காணப்படுவதால் சுற்றுலா பயணிகளின் வரத்து அதிகரித்துள்ளது எனவே சாலையோரம் சுற்றித் திரியும் காட்டு யானைகளை வனத்துறையினர் கண்காணித்து அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும் என்பது வாகன ஓட்டிகள் மற்றும் சுற்றுலா பயணிகளின் கோரிக்கையாக உள்ளது

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி