நீலகிரி மாவட்டம் கோத்தகிரி சுற்றுவட்டாரப் பகுதிகளில் சமீபகாலமாக சிறுத்தைகளின் எண்ணிக்கை அதிகமாக காணப்படுகிறது. குறிப்பாக உணவு மற்றும் தண்ணீர் தேடி குடியிருப்புப் பகுதிகளில் உலாவருவதால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். இந்நிலையில் கோத்தகிரி அருகே கண்ணேரிமூக்கு சாலையில் சர்வசாதாரணமாக சிறுத்தை ஒன்று நடந்துசென்றது.
இதனை அவ்வழியாக சென்ற வாகனஓட்டிகள் வீடியோ எடுத்துள்ளனர். சற்றுநேரம் சாலையில் உலாவிய சிறுத்தை தேயிலைத் தோட்டத்திற்குள் சென்றது. இதனால் வாகனஓட்டிகள் அச்சம் அடைந்துள்ளனர். வனத்துறையினர் சிறுத்தையை கண்காணிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.