*நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள சேலாடா செல்லும் சாலையில் இரவு நேரத்தில் உலா வந்த பெரிய கரடி வாகன ஓட்டிகள் அச்சம்*
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சிறுத்தை காட்டெருமை கரடி புலி உள்ளிட்ட வனவிலங்கு நடமாட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது குறிப்பாக உணவு மற்றும் தண்ணீர் தேடி குடியிருப்பு பகுதிகள் சாலைகளிலும் உலா வருவது தொடர்கதையாக இருந்து வருகிறது.
இந்த நிலையில் கோத்தகிரியில் இருந்து சேலாடா செல்லும் சாலையில் இரவு நேரத்தில் கரடி ஒன்று உலா வந்தது அதை கண்ட அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகள் அச்சம் அடைந்துள்ளனர்.
மேலும் வாகன ஓட்டிகள் இந்த காட்சியை தங்களது செல்போனில் வீடியோ பதிவு செய்து சமூக வலைதளங்களில் பதிவிட்டனர் அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. மேலும் வனத்துறை அதிகாரிகள் இது போன்ற சம்பவம் நடைபெறும் இடங்களில் இரவு நேரத்தில் ரோந்து பணியில் ஈடுபட வேண்டும் என அப்பகுதி மக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.