குன்னூரில் காலையில் நிலவிய கடும் மேகமூட்டத்தை தொடர்ந்து, கனமழையும் நீடித்ததால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. குன்னூர் பகுதிகளில் கடந்த சில நாட்களாக வெயில், சாரல் மழை என மாறுபட்ட காலநிலை நிலவியது. இந்நிலையில், இன்று காலையிலும் நகரப் பகுதிகளில் கடும் மேகமூட்டம் நிலவியது.
இதனால், முகப்பு விளக்குகள் எரிய வைக்கப்பட்டு வாகனங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. கடும் குளிரில் மக்களின் இயல்புநிலை பாதிக்கப்பட்டது. டால்பின் நோஸ், லேம்ஸ்ராக் உள்ளிட்ட சுற்றுலா மையங்களில் அதிகாலை இயற்கை காட்சிகளை ரசிக்க முடியாமல் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றமடைந்தனர்.