நீதிமன்ற உத்தரவுப்படி ஜேசிபி இயந்திரம் மூலம் இடிக்கப்பட்டது

69பார்த்தது
நீலகிரி மாவட்டம் குன்னூரில் பேருந்து நிலையம் எதிரே உள்ள ஆக்கிரமிப்பு கடை உயர் நீதிமன்ற உத்தரவுப்படி இன்று ஜேசிபி இயந்திரம் மூலம் இடிக்கப்பட்டது.

குன்னூர் பேருந்து நிலையம் எதிரே உள்ள கடைகளை அகற்றக் கோரி உயர் நீதிமன்ற உத்தரவுப்படி வருவாய் துறையினர் கடந்த மாதம் பேருந்து நிலையம் எதிரே உள்ள அனைத்து கடைகளையும் அகற்ற நோட்டீஸ் வழங்கினர்.

அப்பொழுது அனைத்து கடை உரிமையாளர்களும் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்ட நிலையில் மூர்த்தி என்பவருது கடைக்கு மட்டும் மேல்முறையீடு செய்யாததால் இன்று (06.06.2024) குன்னூர் வட்டாட்சியர் கனி சுந்தரம் முன்னிலையில் வருவாய்த் துறையினர் ஜேசிபி இயந்திரம் மூலம் அக்கடையை இடித்தனர். இதனால் பேருந்து நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

தொடர்புடைய செய்தி