மனநல காப்பகத்தில் சேர்க்க வலியுறுத்தல்..

50பார்த்தது
கோத்தகிரி டான்போஸ்கோ சாலை வழியாக தவிட்டுமேடு , பெரியார் நகர் அரவேனு இணைக்கும் இணைப்புச்சாலையில் நேற்று இரவு 12: 10 மணிக்கு மர்ம ஆசாமி ஒருவர் கையில் மிகப்பெரிய நீளமான ஆயுதத்துடன் சாலையில் நிறுத்தப்பட்டிருந்த அனைத்து வாகனத்தின் கண்ணாடிகளையும் சைடு மிரர்கலை உடைத்து அட்டுழியம் செய்துள்ளார்

20க்கும் மேற்பட்ட வாகனங்களில் இவ்வாறு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது இந்த மர்ம ஆசாமி யார் என்று தெரியாமல் இருந்தது இது குறித்து வாகன உரிமையாளர்கள் அனைவரும்  கோத்தகிரி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர் இது குறித்து கண்காணிப்பு கேமரா பதிவுகளை சோதனை செய்ததில் அவர் மனநல நோயாளி காளிமுத்து என்பதும் இவர் பொம்மன் எஸ்டேட் பகுதியில் வசித்து வருவதாகவும் போதைப் பொருளால் மனநலம் பாதிக்கப்பட்டு மனநல மருத்துவமனையில் மனநலம் பாதிக்கப்பட்டவர் என சான்றிதழ் வைத்துள்ளதாகவும் காவல்துறை வட்டாரத்தில் கூறப்பட்டது

மேலும் இவர் மீது சோலூர் மட்டம் காவல் நிலையத்தில் வழக்குப்பதியப்பட்டுள்ளதாகவும் ஆடை இன்றி நிர்வாணமாக நின்றதற்காக அங்கிருந்து அடித்து விரட்டப்பட்டவர் எனவும் கோத்தகிரி பகுதியில் கடந்த இரு வாரங்களாக சுற்றி திரிந்ததாகும் கூறப்படுகிறது. உடனடியாக இவரை பிடித்து மனநல காப்பகத்திற்கு அனுப்பப்படுவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி