பழங்கள் அகற்றப்பட்டு உரம் தயாரிக்க முடிவு

52பார்த்தது
பழங்கள் அகற்றப்பட்டு உரம் தயாரிக்க முடிவு
நீலகிரி மாவட்டத்தில் கோடை சீசனின் நிறைவு நிகழ்ச்சியாக, குன்னுார் சிம்ஸ் பூங்காவில், 3 நாட் கள் நடந்த, 64வது பழ கண்காட்சியில், 5. 5 டன் அளவில் அன்னாசி, ஆரஞ்ச், மாதுளம், திராட்சை, மாம்பழம், பலா பழங்களில், 'கிங்காங், வாத்து டைனோசர்' அலங்கார நுழைவாயில் உட்பட பல் வேறு வடிவமைப்புகள் காட்சிபடுத்தப்பட்டன. ஒரு வாரத்திற்கும் மேல் காட்சிப்படுத்தப்பட்ட 'கிங்காங்' உட்பட வடிவமைப்புகளில் இருந்த பழங்கள் அகற்றப்பட்டு விதைகள் சேகரிக்கவும், இயற்கை உரம் தயாரிக்கவும் அனுப்பப்பட்டது. பயன்படுத்தப்படாத பழங்களை பழரசம் தயாரிக்கவும், எலுமிச்சை ஊறுகாய் தயாரிக்கவும் செல்லப்பட்டது.

தொடர்புடைய செய்தி