பந்தலூர்: இலவச கண் சிகிச்சை முகாம்

590பார்த்தது
பந்தலூர்: இலவச கண் சிகிச்சை முகாம்
பந்தலூர் அரசு மருத்துவமனையில் இலவச கண் சிகிச்சை முகாம் நடைப்பெற்றது.

நீலகிரி மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம், கூடலூர் நுகர்வோர் மனிதவள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையம், ஆல்திசில்ட்ரன், சாலோம் சாரிட்டபிள் டிரஸ்ட், நீலகிரி உதவும் கரங்கள், மகாத்மா காந்தி பொது சேவை மையம் ஆகியன இணைந்து நடத்திய கண் சிகிச்சை முகாமிற்கு கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மைய செயலாளர் சிவசுப்பிரமணியம் தலைமை தாங்கினார். ஆல் த சில்ரன் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அஜீத், மகாத்மா காந்தி பொது சேவை மைய தலைவர் நௌசாத், நுகர்வோர் மைய நிர்வாகி இந்திரஜித், ஏகம் பவுண்டேஷன் ஒருங்கிணைப்பாளர் ரவீந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

பந்தலூர் அரசு மருத்துவமனை மருத்துவ அலுவலர் நாசிருதீன், சாதிக் அகமது ஆகியோர் முகாமினை துவக்கி வைத்தனர். ஊட்டி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவக் குழுவினர் அந்தோணியம்மாள், ரகுபதி அஞ்சனாஸ்ரீ, அக்ஸ்ந் அகமது ஆகியோர் பொதுமக்களுக்கு கண் பரிசோதனை மேற்கொண்டு சிகிச்சைகள் அளித்தனர். முகாமில் 100 க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். இதில் 30 பேர் கண்புரை அறுவை சிகிச்சைக்கு அழைத்து செல்லப்பட்டனர்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி