நீலகிரி மாவட்ட கால்பந்து சங்கத்தில் மொத்தம் 44 அணிகள் பதிவு செய்துள்ளன. இந்த அணிகள் ஏ, பி, சி என 3 டிவிஷன்களாக பிரிக்கப்பட்டு லீக் போட்டிகளில் விளையாடி வருகின்றன. இந்த 3 டிவிஷன்களிலும் சிறந்த அணிகளை தேர்வு செய்து, அணிகள் பங்கேற்று விளையாடும் வகையில் மாவட்ட அளவிலான நீலகிரி பிரீமியர் லீக் (என். பி. எல்) போட்டிகள் நடத்தப்பட்டு வரு கிறது. கோத்தகிரி காந்தி மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டியில் 11 அணிகள் பங்கேற்று உள்ளன. இந்தநிலையில் நேற்று நடந்த முதல் போட்டியில் நீலகிரி பைசன் அணியும், நீலகிரி எப். சி. அணியும் மோதியது. இதில் இரு அணிகளும் சம பலத்துடன் விளையாடி தலா ஒரு கோல் போட்டன. இதனால் போட்டி டிராவில் முடிந்தது. 2-வது போட்டியில் கேத்தி அணியும், லெவன் ஸ்டார் அணியும் விளையாடியது. 2 அணிகளும் சிறப்பாக விளையாடி தலா ஒரு கோல் போட்டன. இந்த ஆட்டம் 1-1 என்ற கோல் கணக் கில் டிராவில் முடிந்தது.