படுக சமுதாய மக்களின் திருவிழா

84பார்த்தது
நீலகிரி மாவட்டத்தில் வாழும் படுகு சமுதாய மக்களின் குலதெய்வமான ஹிரியோடையா திருவிழா கோத்தகிரி மற்றும் வட்டார கிராமங்களில் நடைபெற்றது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக 'மண்டெ தண்டு ' திருவிழா நேற்று சிறப்பாக நடைபெற்றது. விழாவில் வெளியூர்களிலிருந்து தாந்தநாடு தொட்டூருக்கு திருமணம் செய்து, முதல் ஆண் குழந்தை பெற்றெடுத்த பெண்கள், தங்களது பாரம்பரிய ஆபரணங்கள் மற்றும் கலாச்சார உடை அணிந்து, தங்கள் குழந்தைகளுடன் கோவிலை சுற்றி வலம் வந்தனர். பின்னர் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
விழாவில் பத்துக்கும் மேற்பட்ட ஆண் குழந்தைகள் மண்டெ தண்டு எடுத்து நேர்த்திக் கடன் செலுத்தினர். இதுபோல கக்குச்சி கிராமத்தில் விழா சிறப்பாக நடைபெற்றது சாமி ஊர்வலம் அதனைத் தொடர்ந்து பெண்கள் குழந்தைகள் ஆண்கள் தின பாரம்பரிய நடனமாடி மகிழ்ந்தனர் இதில் சுற்றுவட்டார கிராம சேர்ந்த திரளானூர் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி