குடியிருப்பு பகுதியில் நடமாடும் சிறுத்தை பொது மக்கள் அச்சம்

74பார்த்தது
கோத்தகிரி சுற்று வட்டாரப் பகுதிகளில் சமீப காலமாக சிறுத்தைகளின் எண்ணிக்கை அதிகரித்து காணப்படுகிறது. குறிப்பாக உணவு , தண்ணீர் தேடி குடியிருப்பு பகுதிகளில் உலா வருவதால் பொது மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

இந்த நிலையில் கோத்தகிரி அருகேயுள்ள கன்னேரிமூக்கு பகுதியில் குடியிருப்பு அருகே நேற்றிரவு (05.06.2024) சிறுத்தை ஒன்று உலா வரும் காட்சி அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது. இதனால் அப்பகுதியில் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். வனத்துறையினர் இப்பகுதியில் முகாமிட்டு சிறுத்தையை கண்காணிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி