நீலகிரி மாவட்டம் குன்னூர் மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமான ரேலியா அனை தொடர் கன மழையின் காரணமாக 43. 5 அடியை எட்டியுள்ளது.
நீலகிரி மாவட்டம், குன்னூர் நகரில் சுமார் 80 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இங்கு வசிக்கும் மக்களின் குடிநீர் தேவையைப் பூர்த்தி செய்யும் முக்கிய அணையாக ரேலியா அணை இருந்து வருகிறது. இந்த அணையானது 43. 5 அடி கொள்ளளவு கொண்டது. இந்த அணையில் இருந்து தண்ணீர் குன்னூர் நகரில் உள்ள குடியிருப்பு பகுதிகளுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
பருவ மழைக் காலங்களில் இந்த அணையானது அதன் முழு கொள்ளளவை எட்டும். அதேபோல் இந்த முறையும் தொடர்ந்து இரண்டு நாள் கன மழை காரணமாக தற்போது ரேலியா அணை 43. 5 அடியை எட்டியுள்ளது. இதனால் குன்னூர் குடியிருப்பு வாசிகளும் விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் ரேலியா அனை முழு கொள்ளளவை எட்டியுள்ளதால் கோடையில் தண்ணீர் பிரட்சனைக்கு வாய்பு இல்லை என நகராட்சி ஆனையாளர் தெரிவித்தார்