காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளது. இதன் காரணமாக திருநெல்வேலி உள்ளிட்ட மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. இதன் தாக்கம் காரணமாக நீலகிரி மாவட்டத்திலும் பனி மூட்டமான காலநிலை நிலவி வருகிறது. குறிப்பாக நீலகிரி மாவட்டத்தின் நுழைவுவாயில் பகுதியாக குன்னூரில் அதிகாலை முதலே பனிமூட்டத்துடன் கூடிய மந்தமான கால நிலை நிலவியது. இதனால் குன்னூர் - மேட்டுபாளையம் பயணித்த வாகன ஓட்டி கள் முகப்பு விளக்குகளை ஒளிர விட்ட படியே மெதுவாக வந்தனர். மேலும் பனிமூட்டம் காரணமாக கடும் குளிர் நிலவியதால் உள்ளூர் பொதுமக்கள் மட்டுமின்றி சுற்றுலா பயணிகளும் அவதியடைந்தனர். இதனால் மலை ரயிலில் பயணித்த சுற்றுலா பயணிகள், சிம்ஸ் பூங்காவிற்கு சென்ற சுற்றுலா பயணிகள் இயற்கை காட்சிகளை காண முடியாமல் ஏமாற்றமடைந்தனர்.