சிறுவர்களுக்கான கால்பந்து இறுதிப்போட்டி; வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசுகள்

74பார்த்தது
சிறுவர்களுக்கான கால்பந்து இறுதிப்போட்டி;  வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசுகள்
கோத்தகிரியில் சிறுவர்களுக்கான கால்பந்து போட்டி கடந்த ஒரு வார காலமாக நடைபெற்று வந்தது. இதில் 12 வயதுக்கு உட்பட்டோர் பிரிவு இறுதிப் போட்டியில் யுத்வான் கால்பந்து அணி மற்றும் புல்சன் கால்பந்து அணிகள் பங்கேற்று விளையாடின.

இதில் யுத்வான் அணி 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. இதனையடுத்து 14 வயதுக்கு உட்பட்டவர்கள் பிரிவு இறுதிப் போட்டி நடைபெற்றது. இதில் கோடமலை கால்பந்து அணி மற்றும் உயிலட்டி குன்னியட்டி கால்பந்து அணி பங்கேற்று விளையாடின. டிராவில் முடிந்ததையடுத்து, நடைபெற்ற டைபிரேக்கரில் உயிலட்டி குன்னியட்டி கால்பந்து அணி வெற்றி பெற்றது.

பின்னர் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

தொடர்புடைய செய்தி