காவல்துறையின் கொடி அணிவகுப்பு நடைபெற்றது

60பார்த்தது
நீலகிரி மாவட்டம் குன்னூரில் வருகின்ற ஏழாம் தேதி நடைபெற உள்ள விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு காவல்துறையின் கொடி அணிவகுப்பு நடைபெற்றது.

நாடு முழுவதும் வருகின்ற ஏழாம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாட இருக்கும் நிலையில் குன்னூர் சுற்றுவட்டார பகுதியில் இந்து முன்னணியினர் சார்பாக 73 இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு விநாயகர் சதுர்த்தி கொண்டாட இருக்கின்றனர் இந்நிலையில் காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் சௌந்தர்ராஜன் மற்றும் குன்னூர் துணை கண்காணிப்பாளர் குமார் தலைமையில் 150 க்கு மேற்பட்ட காவல்துறையினர் குன்னூர் சிம்ஸ் பூங்காவில் இருந்து பேண்ட் வாத்தியம் முழங்க குன்னூரில் முக்கிய சாலையான மவுண்ட் ரோடு வழியாக கொடி அணிவகுப்பு பேரணி நடைபெற்றது இறுதியில் பேருந்து நிலையம் வந்தடைந்து கொடி அணிவகுப்பு பேரணி நிறைவு செய்யப்பட்டது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி