ஊட்டி அருகே மாட்டை வேட்டையாடிய சிறுத்தை

56பார்த்தது
ஊட்டி அருகே மாட்டை வேட்டையாடிய சிறுத்தை
நீலகிரி மாவட்டத்தில் 67 சதவீத வனப்பகுதி உள் ளது. இங்கு வனவிலங்குகள் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது. ஆனால், வனவிலங்குக ளுக்கு தேவையான உணவு வனப்பகுதியில் கிடைப்பது இல்லை. கடந்த சில மாதங்களாக வனவிலங்குகள் வனப்பகுதியை ஒட்டி உள்ள பகு திகளுக்குள் புகுந்து அட்டகாசம் செய்கின்றன. இதனால் மனித-வனவிலங்கு மோதல் ஏற்படு கிறது. கடந்த சில நாட்களாக ஊட்டி வேலிவியூ பகுதியில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக பொது + மக்கள் தெரிவித்து வந்தனர். இந்தநிலையில் சிறுத்தை மீண்டும் வேலிவியூ பகுதிக்கு வந்து, மாட்டை வேட்டையாடி சாவகாசமாக தின்று விட்டு சென்றது. இதனை அந்த வழியாக சென்றவர்கள் செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைத் தளத்தில் பதிவிட்டனர். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், சிறுத்தை மாட்டை வேட்டையாடி நீண்ட நேரம் காத்திருந்து தின்று விட்டு சென்றது. இதனால் இந்த பகுதிக்கு சிறுத்தை மீண்டும் வரும். அப் போது இரை கிடைக்காவிட்டால் குடியிருப்பு ப்கு திக்குள் வர வாய்ப்பு உள்ளது. இதனால் குடியிருப்பு பகுதியில் அச்சத்துடன் இருக்க வேண்டிய சூழ் உள்ளது. எனவே, வனவிலங்குகள் குடியி ருப்பு பகுதிக்குள் வருவதை தடுக்க வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

தொடர்புடைய செய்தி