நீலகிரி மாவட்டம் முதுமலை வனப்பகுதிக்கு உட்பட்ட சீகூர் அருகே ஆண் புலியின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. புலி எப்படி இறந்தது என்ற தகவல் இன்னும் வெளியாகவில்லை. உடற்கூராய்வு செய்த பிறகே புலியின் இறப்புக்கான காரணம் தெரியவரும் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர். கடந்த மே மாதம் 29ம் தேதி பைக்காரா நீர்வீழ்ச்சி பகுதியில் 8 வயது மதிக்கத்தக்க ஆண் புலியின் சடலத்தை வனத்துறையினர் கண்டெடுத்தார்கள்.