காலணி ஒன்றில் இருந்து சிறிய நாக பாம்பு படமெடுத்து ஆடியபடி வெளிவந்த வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்திய வன துறை அதிகாரி சுசந்தா நந்தா எக்ஸ் சமூக ஊடகத்தில் இந்த வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில், பெண் ஒருவரின் காலணி ஒன்றில் இருந்து சிறிய நாக பாம்பு ஒன்று வெளியே வருகிறது. வீடியோ எடுப்பவரை நோக்கி சீறியபடி அது காணப்பட்டது. மழைக்காலங்களில் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என அவர் பதிவிட்டுள்ளார்.