தமிழ்நாடு முழுவதும் 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளில் சிறப்பான மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சியடைந்த மாணவ, மாணவிகளுக்கு தவெக சார்பில் இன்று (ஜூன் 4) பாராட்டு விழா நடைபெற்று வருகிறது. 2ஆம் கட்டமாக நடைபெறும் இந்த விழாவில் 10, 12ஆம் வகுப்பில் முதல் 3 மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு விஜய் பரிசு வழங்கி வருகிறார். அப்போது மேடையில் பேசிய மாணவி, “கட்டாயம் 2026-ல் விஜய் CM ஆவார்” என்றார். உடனே மைக்கை வாங்கிய விஜய், “நான் சொல்லி கூட்டிட்டு வரல” என நகைச்சுவையாக பேசினார்.