மகாராஷ்டிரா: அனில் (53) என்பவரின் முதல் மனைவி உயிரிழந்த நிலையில் 3 வாரங்களுக்கு முன் ராதிகா (27) என்ற இளம்பெண்ணை அவர் மறுமணம் செய்தார். இந்நிலையில் தம்பதி இடையே பாலியல் உறவு தொடர்பாக சண்டை ஏற்பட்டு வந்தது. இதில் கோபமடைந்த ராதிகா கோடாரியால் கணவரின் தலையில் வெட்டிக் கொலை செய்தார். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் ராதிகாவை கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.