கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த வித்யா (25) என்பவருக்கும் சிவு என்பவருக்கும் கடந்த 7 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. கடந்த 30ஆம் தேதி தம்பதி இடையே ஏற்பட்ட தகராறில், வித்யா வீட்டை விட்டு சென்றதாக கூறப்படுகிறது. தனது மனைவியை காணவில்லை என கணவர் போலீசில் புகார் அளித்துள்ளார். இந்நிலையில், அன்றைய தினம் இரவே அரிசிகெரே ரயில் நிலையம் அருகே ரத்த காயங்களுடன் வித்யா உடல் மீட்கப்பட்டது. இது கொலையா? அல்லது தற்கொலையா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.