விமான விபத்தில் திருமணமான 2 நாளில் புது மாப்பிள்ளை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பாவிக் மகேஸ்வரி (26) என்பவருக்கு விபத்து ஏற்படுவதற்கு 2 நாட்களுக்கு முன்புதான் திருமணம் நடந்துள்ளது. இந்நிலையில், அவர் விமான விபத்தில் பரிதாபமாக இறந்துள்ளார். அவரது மாமா கமலேஷ் மகேஸ்வரி, "எனக்கு ஒரு வீடியோ கிடைத்துள்ளது. அதில் ஒருவர் என் மருமகன் என்று தோன்றுகிறது. அவர் இன்னும் உயிருடன் இருப்பதாக நம்புகிறேன்" என்று அவரது கூறியுள்ள வார்த்தைகள் கண்ணீரை வரவழைத்துள்ளது.