சிவகங்கை: திருப்புவனத்தைச் சேர்ந்த வினோத் குமார் (22) - பவித்ரா (18) ஆகிய இருவரும் காதலித்து வந்த நிலையில், திருமணத்திற்கு இரு வீட்டாரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இரு மாதங்களுக்கு முன் வீட்டாரை எதிர்த்து இருவரும் திருமணம் செய்து கொண்டனர். அடிக்கடி இரு வீட்டார்களும் வினோத் மற்றும் பவித்ராவை திட்டியுள்ளனர். இந்நிலையில், வினோத் குமார் மற்றும் பவித்ராவும் இருவரும் இணைந்து பூச்சி மருந்தை குடித்துள்ளனர். இருவரையும் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் போது வழியில் இறந்துள்ளனர்.