கன்னியாகுமரியின் ஜெமலா (26) தற்கொலை செய்து கொண்ட நிலையில், அவரது தாய் புஷ்பலதா போலீசில் புகாரளித்துள்ளார். அந்த புகாரில், "எனது மகளின் மாமனார், தினமும் ரூ.500 வாங்கிச் செல்வார். தராவிட்டால் அடிப்பார். 50 பவுன் நகை, ரூ.50 லட்சத்தில் சொந்த வீடு, 6 லட்சம் ரூபாய், பைக்கை வரதட்சணையாக கொடுத்தேன். மீண்டும் பணம் வேண்டும் என கேட்டதால், என் தாலியை அடகுவைத்து 5 லட்சம் கொடுத்தேன். எனது மகளின் கழுத்தில் கயிற்றால் இறுக்கியது போன்ற தடம் உள்ளதால் மகளின் உயிரிழப்பில் சந்தேகம் உள்ளது" என தெரிவித்துள்ளார்.