திருமணமான 4 நாட்களில் புதுப்பெண் தற்கொலை

58பார்த்தது
திருமணமான 4 நாட்களில் புதுப்பெண் தற்கொலை
கோவை கீரணத்தத்தைச் சேர்ந்த சரவணன் என்பவருக்கு, திண்டுக்கல் தேவனம்பட்டியைச் சேர்ந்த தீபிகாவுடன் கடந்த 4 நாட்களுக்கு முன் திருமணம் நடந்தது. திருமணம் முடிந்த அன்றிலிருந்தே தீபிகா, சரவணனுடன் நெருக்கம் காட்டாமல் இருந்ததாக தெரிகிறது. இந்த நிலையில் மனைவியின் உறவினரை சரவணன் வழியனுப்ப சென்றபோது, தீபிகா திடீரென வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். தகவலறிந்த கோவில்பாளையம் போலீசார் பெண்ணின் உடலை கைப்பற்றி வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.

தொடர்புடைய செய்தி