மஹாராஷ்டிரா மாநிலம் புனேவில் புதிதாக பிறந்த குழந்தைக்கு இதய அறுவை சிகிச்சை செய்ய மருத்துவர்கள் முடிவெடுத்துள்ளனர். நுரையீரல் அட்ரேசியாவால் என்ற நோயினால் பாதிக்கப்பட்ட பிறந்த குழந்தைக்கு மருத்துவர்கள் உயிர்காக்கும் அறுவை சிகிச்சை செய்து உயிரை காப்பாற்றி இருக்கின்றனர். சிக்கலான டக்டல் ஸ்டென்டிங் செயல்முறையை மேற்கொண்டு நுரையீரல் தமனி அடைக்கப்பட்டு இருந்த குழந்தைக்கு உயிர்கொடுத்துள்ளனர். விரைவில் இதய அறுவை சிகிச்சை செய்ய இருப்பதாகவும் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.