ஒருநாள் உலகக் கோப்பை தொடரில் இன்று நடைபெறும் போட்டியில் நியூசிலாந்து அணி நெதர்லாந்தை எதிர்கொள்கிறது. இவ்விரு அணிகள் மோதும் போட்டி ஐதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் பிற்பகல் 2 மணிக்கு தொடங்குகிறது. உலகக் கோப்பையின் முதல் ஆட்டத்தில் பலம் வாய்ந்த இங்கிலாந்து அணிக்கு எதிராக நியூசிலாந்து அணி ஏற்கெனவே வெற்றி பெற்றுள்ளது. இரண்டாவது போட்டியிலும் வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்பில் களமிறங்குகிறது. நெதர்லாந்து அணியும் பலம் வாய்ந்த நியூசிலாந்து அணிக்கு ஈடுகொடுத்து விளையாட வேண்டும் என்ற முனைப்புடன் களமிறங்க உள்ளது.